வவுனியாவில் தபால் திணைக்கள ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பால் தபால்துறை முடங்கியது!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தால் வவுனியாவில் தபால்துறை முடங்கி காணப்படுகின்றது.

நிர்வாக ரீதியாக தாம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டடத்தில் சுற்றுலா விடுதியை நடத்த தீர்மானித்தமைக்கு எதிராகவும் 48 மணிநேர பணி பகிஸ்கரிப்பாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று (13-06) அதிகாலை 12 மணியில் இருந்து 48 மணிநேரம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடும் நிலையில் இதற்கான தீர்வு வழங்கப்படாத நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதியில் இருந்து தொடர் போராட்டமாக நடத்த தீர்மானித்துள்ளனர்.

இதன் காணரமாக வவுனியா பிரதான தபால் நிலையம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டு காணப்படுகின்றது.

ஊழியர்கள் பணியில் இன்மையால் பல்வேறு தேவைகளுக்காகவும் தபால் நிலையங்களுக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ல்வதை காணக்கூடியதாக உள்ளது.

You might also like