கிளிநொச்சியிலுள்ள சிறிய குளங்களின் புனரமைப்பிற்கு நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 39 சிறிய குளங்களை புனரமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சினூடாக நூறு மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு மீள்குடியேற்ற அமைச்சினூடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் விவசாய அபிவிருத்தியை மேம்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்களை புனரமைப்பதற்கு நூறு மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியின் கீழ் கமநலசேவை நிலையங்களின் பராமரிப்பில் உள்ள 39 குளங்கள் புனரமைப்பிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like