வவுனியா கூமாங்குளத்தில் 500 குடும்பங்களுக்கு மாங்கன்றுகள் மஸ்தான் எம்பியியால் வழங்கி வைப்பு

ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் கீழ் வவுனியா கூமாங்குளம் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு டொம்.என்.ஜே. சீ மாங்கன்றுகளை அமைச்சர் தயா கமகே உடன் இணைந்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே. காதர் மஸ்தான் நேற்று (12.06.2017) வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வின் இறுதியில் ஞாபகார்த்தமாக முதல் மாங்கன்றை கூமாங்குளம் சித்தி விநாயகர் பாடசாலையில் அமைச்சர் தயா கமகே உடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களும் நாட்டி வைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள் விடயத்துக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் பயனாளிகள் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

You might also like