வற்றாப்பளை பொங்கலுக்கு சென்று வந்தவர் விபத்தில் பலி

வற்றாப்பளை பொங்கலுக்கு சென்று வந்தவர் மீது கென்டர் வாகனம் மோதியதில் சரசாலை புத்தூர் வீதியில் அமைந்துள்ள காளிகோவிலுக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

வற்றாளை கண்ணகையம்மன் கோவில் பெங்கலுக்கு சென்றுவிட்டு சரசாலை புத்தூர் வீதியாக நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சரசாலை வடக்குப் பகுதியை சேர்ந்த வி.சிவசுந்தரம் வயது 65 என்ற குடும்பஸ்தர் மீது காளிகோவிலுக்கு அருகில் வேகமாக வந்த கென்டர் வட்டா வாகனம் மோதிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like