வவுனியா இ.போ.சபைக்கு வற்றாளைப்பளை விசேட பேருந்துச் சேவையினால் கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் கடந்த (12.06.2017) அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதனையொட்டி வவுனியா இ.போ.சபையினரால் விஷேட போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெற்றன.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தினால்  இ.போ.சபை வவுனியா சாலைக்கு சுமார் 17,55000 ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றதாக இ.போ.ச வவுனியா சாலை முகாமையாளர் முகமட் சாகிர் தெரிவித்தார்

மேலும் கருத்து தெரிவித்த சாலை முகாமையாளர்,

கடந்த 12ம் திகதி மற்றும் 13ம் திகதி வவுனியாவிலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு 41 இ.போ.ச பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டன. இதனால் எமது வவுனியா சாலைக்கு 12ம் திகதி 993000 ரூபா வருமானமும் 13ம் திகதி 766000 ரூபா வருமானமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக  தெரிவித்தார்.

You might also like