க.பொ.த சாதாரணதர பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கு ஓர் அறிவித்தல்

இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி நாளையுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மாணவர்கள் அதிபரின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் குறிப்பிட்ட பரீட்சைக்கான கட்டணத்தை செலுத்தி பதிவுத்தபால் மூலம் விண்ணப்பப்படிவத்தை அனுப்பி வைக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சைகள் பழைய மற்றும் புதிய கல்வி திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like