முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரினர் விசாரணையொன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றப்புலனாய்வு பிரிவின் கொழும்பில் அமைந்துள்ள தலைமையகத்திற்கு நேற்று முன்தினம் அவர் அழைக்கப்பட்டு குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது அவரிடம் சுமார் ஒரு மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகின்றது.

இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வெளிநாடு செல்வதற்காக கடிதம் வழங்கியமை தொடர்பாகவே குறித்த விசாரணை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்ட போது குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை அழைத்து விசாரணை நடாத்தியதை உறுதிபடுத்தியிருந்தார்.

You might also like