கிளிநொச்சியில் ஐந்து பிள்ளைகளின் தந்தை படுகொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவரை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி டிப்போவீதி கனகபுரம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் ஒப்பந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது அவரது மனைவியையும் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே அந்த வழக்கு மீண்டும் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like