கிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த பெண்களுக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு பெண்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சந்தேகநபர்களால் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட போதும் பொலிஸார் மருத்துவ பரிசோதனை அறிக்கை கிடைப்பெறாததை அடுத்து பிணையில் செல்ல ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் உத்தரவுபிறப்பித்துள்ளார்.

மேலும் கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்தமை தொடர்பில் விசேட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் குறித்த நான்கு பெண்களும் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like