வவுனியாவில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கிடையே மோதல் : ஒருவர் வைத்தியசாலையில்

வவுனியா நெடுங்கேணியில் இன்று (14.06.2017) மதியம் 2.00மணியளவில் இரு சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கிடையே ஏற்ப்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நெடுங்கேனி சமுர்த்தி வங்கியில் பணிபுரியும் சக உத்தியோகத்தர் ஒருவரின் பிறந்ததினத்தினை முன்னிட்டு வர்த்தக நிலையத்திற்கு சென்று குளிர்பானம் அருந்தி விட்டு மதிய உணவு நேரத்தில் சமுர்த்தியில் பணிபுரியும் சக உத்தியோகத்தர்களுடன் கதைத்துக்கொண்டிருந்த சமயத்தில் திடிரேன அவ்விடத்திற்கு வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் (கபி…ன்) அவர்களின் கதைக்கு எதிர்ப்பு கதையினை கதைத்துள்ளார்.

தீடிரேன குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் அங்கு கதைத்துக்கொண்டிருந்த சமுர்த்தி உத்தியோகத்தர்  திருநாவுக்கரசு சுதாகரன் (வயது – 38) என்பவரை அடித்து தாக்கியுள்ளார்.

இதனால் காயமடைந்த சமுர்த்தி உத்தியோகத்தர்  நெடுங்கேனி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You might also like