வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்திற்கு பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

பல்வேறு சவால்கள் கொண்ட கிராமங்களும் சூழல்களும் கிட்டிய தூரத்தில் அமைந்துள்ள பூந்தோட்டம் மகாவித்தியாலயம் படிப்படியாக மாணவர்ளிடையே மன மாற்றங்களைக் கண்டுவருகிறது.

கல்லூரி முதல்வர் திருமதி கிருஸ்ணவேணி நந்தபாலன் தலைமையில் உப அதிபர்கள் திரு.த.சமிந்ததர்சன் திருமதி மோ . ஞானமணி , திருமதி மே.சகாயநாதன், திருமதி ச.சிவகுமார் , கல்லூரி ஆசிரியர்கள், கல்லூரி அபிவிருத்திச்சங்கம் , பாடசாலை பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் மூலம் மாற்றங்களைக் கண்டு வருகிறது.

மாணவர்கள் மத்தியில் நல்லொழுக்க சிந்தனைகளை வளர்த்தெடுப்பதில் அயராத முயற்சிகள் பாடசாலை அதிபர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்விப் பொதுத்தராதர மாணவர்களின் உளநல சிந்தனைகள் தொடர்பிலும் அக்கறை காட்டி அவர்களுக்கான பயிற்சி வகுப்புகளையும் பலர் மூலம் முன்னெடுத்து வருகின்றனர் .

பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கடும் வறுமைப்பட்டுள்ளனர். இவர்களின் கல்வித்துறையை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நலன்விரும்பிகள் மூலம் கற்றல் உபகரணங்கள் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகமூடாக பாடசாலை ஆசிரியர் திரு அ.ரஞ்சன் உதவி தொடர்பில் கேட்டுக்கொண்டதற்கிணங்க லண்டனில் உள்ள வீ – 3 அமைப்பினர் இன்று கற்றல் உபகரணங்களை வழங்கினர் .

இவ்வமைப்பின் உறுப்பினர் லண்டன் வாழ் திரு தி .கிருபாகரன் அவர்கள் தனது மகன் செல்வன் கி.அகழியன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு செல்வி சி. துஸானி என்பவருக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கி உதவினர். மேலும் வீ -3 அமைப்பினர் 30 மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளையும் வழங்கியுள்ளனர் . .

மாவட்ட சமூகசேவை அதிகாரி செ.ஸ்ரீநிவாசன் அபிவிருத்தி உத்தியோகத்ததர் எஸ்.கே.வசந்தன் மற்றும் எஸ் . புருசோத்தமன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் .

அதிபர் தனது உரையில் பல சவால்களை எதிர்கொண்டு இந்தக்கல்லூரிக்கு மாணவர்கள் கல்வி கற்க வருகின்றனர் .இவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது சமூகத்தின் கடமை. அந்த வகையில் இன்று வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகமூடாக லண்டனில் உள்ள வீ – 3 அமைப்பினர் உதவிபுரிவதை நான் நன்றியுடன் வரவேற்கிறேன் , எனக்குறிப்பிட்டார் .

மாவட்ட சமூகசேவை அதிகாரி செ.ஸ்ரீநிவாசன் மாணவர்கள் தமது கல்விக்கு மேலாக ஒழுக்கத்தை கண்ணெனப்போற்ற வேண்டும் அதை உயிராக மதிக்க வேண்டும் , ஒழுக்கம் ஏதாவது ஒரு கட்டத்தில் எமக்கு உயர்வைத்தரும் .பல விசமிகள் மாணவர்களின் ஒழுக்கத்தை சீர்குழைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .

பாடசாலைகளின் அருகே இனந்தெரியாதோர் சந்தேகத்திற்கிடமான நபர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டால் பாடசாலை சமூகமும் ஊர்மக்களும் அவற்றைத்தட்டிக்கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார் .

You might also like