சற்று முன் வவுனியாவில் அவசரமாக கூடுகிறது தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்ட அரசியல் குழு

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை காரியாலயத்தில் உயர்மட்ட உறுப்பினர்களின் அரசியல் குழு கூட்டம் இன்று 15-06-2017 காலை 10.00 மணிக்கு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா தலைமைக்காரியாலயத்தில் இன்று மாலை 2.00 மணிக்கு நடைபெறுவதாக இருந்த கூட்டமானது அவசராமாக காலை 10.00 மணிக்கு கூடி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணசபை அமைச்சர்களான குருகுலராஜா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோரை பதவி விலக வடக்கு மாகாண முதலமைச்சர் பணித்திருக்கும் நிலையில் நேற்றையதினம் 14-06 தமிழரசக்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் முதமைச்சர் மீது நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பாக கடிதம் வடக்குமாகாண ஆளுநரிடம் கையளித்துள்ள நிலையில் அது குறித்து கலந்துரையாடுவதற்காகவே கூட்டம் நடைபெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடக்கலநாதன் தெரிவித்தார்.

You might also like