சற்று முன் வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு : வவுனியாவில் விஷேட கூட்டம்

வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று (15.06.2017) மதியம் 3.30மணியளவில் வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொதுஅமைப்புக்கள் ஒன்றினைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

தமிழ் மக்களின் தேசிய கொள்கையுடன் செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசு கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை தடுக்க தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.

முதலமைச்சரை மாகாணசபையிலிருந்து வெளியேற்றுவதற்கு முழுமையான எதிர்பினை வெளியிடுகின்றோம், தமிழரசு கட்சி மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழரசு கட்சி மிகப்பாரிய தவறு ஒன்றை செய்து கொண்டிருக்கின்றது , வவுனியா மாவட்டத்தை பிரநிதிப்படுத்துக்கின்ற அமைச்சர் முதலமைச்சரை வெளியேற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தால் அவரது வீட்டை முற்றுகையிடுதல் , தமிழரசு கட்சியின் இவ்வாறான செயற்பாட்டால் வவுனியா வாழ் மக்கள் கவலையடைகின்றோம், மற்றும் நாளைய தினம் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதற்கும் இக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது

இக் கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

 

You might also like