விக்கியின் விவகாரத்தில் திடீர் திருப்பம்!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீளப்பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையினை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள வடமாகாண அமைச்சர்களை பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து, ஆளும் கட்சி உறுப்பினர்கள் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தீர்மானித்து, அது குறித்த கடிதத்தை ஆளுநரிடம் கையளித்திருந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் குறித்த விவகாரம் பரபரப்பாகியிருந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் அவசர விஜயமாக வடமாகாணத்திற்கு சென்றிருந்தார்.

இதன்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றம் சாட்டப்படாத அமைச்சர்களை பதவியில் தொடர்ந்தும் நீடிக்க செய்வதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like