வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் இப்தார் நிகழ்வு : தமிழ் மக்களும் கலந்து கொண்டனர்.

வவுனியா முஸ்ஸிம் தேசிய பாடசாலையில் வவுனியா பட்டாணிச்சூர் அல் ஹிஜ்ரா விளையாட்டு கழகத்தின் ஏற்ப்பாட்டில்  சமாதான நீதவான் A.M. றகீம் தலைமையில் A.R.M.லறீப் அவர்களின் நெறிப்படுத்தலில் நேற்று (14.06.2017) மாலை 5.30மணியளில் இப்தார் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் ,சமூக சேவையாளர்கள் .வர்த்தகர்கள், சமயத்தலைவர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளூர், அமைப்புகளின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் , ஊடகவியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் இன,மன பேதங்களை கடந்து வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து சமயத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like