வவுனியா நோக்கி வந்த வான் விபத்து மதகுரு உட்பட இருவர் பலி

மதவாச்சி பூணாவை பகுதியில் நேற்று (15.06.2017)​ மாலை 6.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் மதகுரு உட்பட இருவர் பலியானதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர் என மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மதவாச்சி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்த வான் எதிர் திசையில் வந்த முற்சக்கரவண்டியுடன் மோதுண்டதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது முற்சக்கரவண்டி சாரதியும் இதில் பயணம் செய்த பௌத்த மதகுருவொருவரும் ஸ்தலத்தில் பலியாகியதுடன் வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like