வவுனியாவில் இளைஞர் சேவை மன்றத்திற்கான புதிய கட்டட தொகுதி திறந்து வைப்பு

வவுனியாவில்  ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியின்  கீழ்  இளைஞர் சேவை மன்றத்திற்கான புதிய கட்டட தொகுதி அமைக்கப்பட்டிருந்தது. தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் நிரோசன் பெரேராவினால் குறித்த கட்டிடம்  திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது இளைஞர் சேவைகள் மன்றத்தில் கற்கும் மாணவர்களுக்கான விசேட உதவித் திட்டங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்  வடமாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், ஜெயதிலக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமார, கைத்தொழில் வாணிப அமைச்சின் இணைப்பாளர் முத்து முகமது, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இளைஞர் கழக  சம்மேளத்தின் தலைவர் சு.காண்டீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கேசவன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like