மக்கள் தெருவில் மாகாணசபை திமிரில்! வவுனியாவில் முதலமைச்சருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்ப்பாட்டில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று ( 16.06.2017) காலை 10.30 மணியளவில் வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது குற்றவாளிகள் நீதிபதியை தண்டிப்பதா, எதிர்கட்சிகளோடு கூட்டு தமிழ் மக்களுக்கு வேட்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் சகுனிகளே வெளியே போ! , இளைஞர்கள் புரட்சி மக்கள் எழுச்சி விக்கி வெற்றி, மக்கள் தெருவில் மாகாணசபை திமிரில், எதிர்கட்சிகளோடு ஒப்பந்தம் மக்களுக்கு தீப்பந்தம் என பல்வேறு வாகசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

இப் போராட்டத்தில் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ம. தியாகராசா, இ. இந்திரராசா, ஜி. ரி. லிங்கநாதன், வவுனியா மாவட்ட பொது அமைப்பின் பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் , முச்சக்கரவண்டி சாரதிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இப் போராட்டமானது சுமார் ஒரு மணித்தியாளம் மேற்கொள்ளப்பட்டதுடன் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.

You might also like