முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தை ஒதுக்கப்பட்டோருக்கான மக்கள் அமைப்பு மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சருக்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சியினர் செயற்படுவதை கண்டித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like