கிளிநொச்சியில் ஹர்த்தால்! இயல்பு நிலை பாதிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறவில்லை.

மேலும் பாடசாலைகளுக்கும் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாக காணப்பட்டமையினால் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அரச திணைக்களங்களிலும் உத்தியோகத்தர்களின் வரவு குறைவாக காணப்பட்டமையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிலையில் காலையில் பூட்டப்பட்டிருந்த கடைகள் சில தற்போது திறக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like