தமிழர்களின் அரசியலை தலைமையேற்க விக்னேஸ்வரன் ஐயா வருக! நல்லூரில் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் வடமாகாண சபை முற்றிலுமாக முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தொடர்ந்து, முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த போராட்டத்தில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், முதலமைச்சருக்கு வலுசேர்க்கும் வகையில் பல்வேறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் தற்போது வடமாகாண முதலமைச்சரில் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள இளைஞர்கள் “முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் வடமாகாண சபை முற்றிலுமாக முடக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like