கிளிநொச்சி முறிப்பு குளத்தில் சட்டவிரோத மண் அகழ்வு

கிளிநொச்சி முறிப்பு குளத்தில் மண் அகழ்வு இடம்பெறுவதால், அக்குளத்தில் உள்ள தாவரங்கள் அழிவடையும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பிரதேச மக்கள் தெரிவிக்கையில்,

முறிப்பு குளத்தில் திட்டமிடப்படாத வகையில் பாரிய மண் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

அத்துடன் இந்த செயற்பாட்டின் காரணமாக குறித்த குளத்தில் காணப்படும் தாவரங்கள் அழிவடையும் நிலை தோன்றியுள்ளது.

இதேவேளை பெரிய மரங்களை அண்டிய பகுதியிலும் மண் அகழப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.

இவ்வாறு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் மண் அகழ்வினை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

You might also like