வவுனியா வடக்கில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் – இயல்பு நிலை பாதிப்பு

வடக்குமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இன்று வவுனியா வடக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

ஒருசில உணவகங்கள் மற்றும் மருந்தகங்களைத் தவிர அனைத்து வியாபார நிலையங்கள் மற்றும் பாடசாலைகள் என்பனவும் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like