பூநகரியில் சிக்கியது 248 கிலோகிராம் கேரள கஞ்சா

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் 248 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் படகில் இருந்து கார் ஒன்றுக்கு கைமாற்ற முயற்சிக்கப்பட்டபோதே இன்று அதிகாலை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கேரள கஞ்சாவை கொண்டு சென்ற சந்தேகநபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும், இது தொர்பில் விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

You might also like