கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த ஐ.நாவின் பிரதிநிதி

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராட்டத்தினை மேற்கொண்டு வரும் அவர்களது உறவினர்களை ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி உனாமெக்குலே இன்று காலை சந்தித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 118ஆவது நாளாகவும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர்ந்து வருகிறது.

குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நா பிரதிநிதிக்கு மகஜரொன்றினை கையளித்திருந்தனர். அத்துடன் தொடர்ச்சியாக இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையிலேயே இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்த வதிவிட பிரதிநிதி அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like