துரித கதியில் எலும்புகளை கரைக்கும் ஆபத்தான போதைப் பொருள் இலங்கையில்

இலங்கை போதைப் பொருள் சந்தைக்கு துரித கதியில் எலும்புகளை கரைக்கும் ஆபத்தான போதைப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

50 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இளைஞர்களிடம் இருந்து கைப்பற்றிய போதைப் பொருளின் பெறுமதி 10 இலட்சம் ரூபா என பொலிஸார் கூறியுள்ளனர்.

ஐஸ் போதைப் பொருள் அண்மையிலேயே இலங்கையில் போதைப் பொருள் சந்தைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போதைப் பொருளை பயன்படுத்தினால், எலும்புகள் துரிதமாக கரைந்து விடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஐஸ் போதைப் பொருள் இரசாயன முறையில் தயாரிக்கப்படும் ஒரு போதைப் பொருளாகும் இதனை பயன்படுத்துவோர், குறுகிய காலத்தில் உயிரிழக்கும் ஆபத்தும் இருப்பதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like