கிளிநொச்சியில் மூன்றாவது முறையாக இடம்பெறும் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்

சர்வதேச யோகா தின நிகழ்வுகள் மூன்றாவது முறையாக கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று காலை 07.30 மணி தொடக்கம் 09.00 மணி வரையில் இடம்பெற்றிருந்தன.

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த யோகா தின நிகழ்வுகளில் கிளிநொச்சி முல்லைத்தீவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வின் போது ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உனாமெக்குலே முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், யாழ். இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like