புளியங்குளம் வீதியில் யானைகள்: அச்சத்தில் பயணிகள்!

புளியங்குளம் – நெடுங்கேணி வீதியில் மாலை நேரங்களில் அடிக்கடி யானைகள் வீதியை ஊடறுத்து செல்வதால் அவ் வீதியால் பயணம் செய்வோர் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது.

நேற்று புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் வவுனியா, புளியங்குளம் – நெடுங்கேணி வீதியில் உள்ள வயல்வெளிகள் முடிவடையும் இடத்தில் வீதிக்கு பிரவேசித்த யானைகள் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் நடமாடியுள்ளது.

இதனால் அவ் வீதியால் பயணித்தோர், வேலை முடிந்து வீடு திரும்பிய அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் அச்சத்துடனேயே பயணித்ததாக தெரியவருகிறது.

இவ் வீதியில் அடிக்கடி யானைகள் வீதியை ஊடறுப்பதாகவும் அவ் வீதியால் பயணிப்போர் தெரிவிக்கின்றனர்.

 

You might also like