வவுனியாவில் சுவாமி விவேகானந்தர் 154வது பிறந்ததின நிகழ்வு

தமிழ் விருட்சம், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், வரியிறுப்பாளர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த சுவாமி விவேகானந்தர்154வது பிறந்ததின நிகழ்வு  இன்று  12.01.2017 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு வவுனியா புகையிரத நிலைய வீதியில்  அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் சிலை அடியில் தமிழ் மணி அகளங்கன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் மயூரன்,தமிழ்மணி அகளங்கன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்  நித்தியானந்தன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்  எஸ்.எஸ்.வாசன், முன்னாள் நகரபிதா சந்திரகுலசிங்கம் மோகன், வரிவிருப்பாளர் சங்கத்தலைவர் சந்திரகுமார் கண்ணன்,தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டிபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கேசவன் மற்றும் அரச,அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் ,சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா நகரசபையால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வுருவச்சிலை வவுனியா 1998.04.03ம் திகதி நகரசபைத்தலைவராக இருந்த ஜீ.ரி.லிங்கநாதன் ( வ.ட.மா.ச.உ) அவர்களின் அழைப்பின் பேரில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த கே.கணேஷ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like