வவுனியாவில் கருணாம்மாவின் வருகையினால் மக்களிடையே குழப்பநிலை : பொலிஸார் குவிப்பு

வவுனியா கிடாச்சூரி பொதுநோக்கு மண்டபத்தில் இன்று (18.06.2017) காலை 11.00மணியளில் மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெறவிருந்தது. மக்களின் எதிர்ப்பினையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெறவிருந்த கூட்டமும் நிறுத்தப்பட்டது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

கிடாச்சூரி பொதுநோக்கு மண்டபத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெற ஒழுங்குபடுத்தப்பட்ட  போதும் கிராம மக்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்படவில்லை எனவும், இக் கூட்டம் தன்னிச்சையாக ஒரு சிலரால் ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும், பொது நோக்கு மண்டபம் யாரிடமும்  அனுமதி பெறாமல் ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும், அரசியல் விடயம் தொடர்பாக சந்திப்பு நடத்த இவ் மண்டபம் கொடுக்கப்படாதெனவும் தெரிவித்து அவ்விடத்தில் சந்திப்பு நடைபெறாமல் மக்கள் தலையிட்டதையடுத்து பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் கிராம அபிவிருத்தி சங்க செயலாளரின் வீட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட பின்னர் சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like