வவுனியா ஏ9 வீதியில் இ.போ.ச பேருந்து மற்றும் தனியார் பேருந்து விபத்து

வவுனியா ஏ9 வீதி சுகாதார திணைக்களத்திற்கு முன்பாக இன்று (19.06.2017) மதியம் 1.30மணியளவில் தனியார் பேருந்தும் இ.போ.ச பேருந்தும் விபத்துக்குள்ளனாது. 

இவ் விபத்துச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சுகாதார திணைக்களத்திற்கு முன்பாக அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் தரித்து நின்ற சமயத்தில் கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இரு பேருந்துகளும் சிறியளவில் சேதமடைந்ததுடன் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்ப்படவில்லை

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like