வவுனியா புளியங்குளத்தில் இந்திய துணைத்தூதுவரால் திருவள்ளுவர் சிலை திறப்பு வைப்பு

வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியின் நுழைவாயிலுக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை பாடசாலை அதிபர் ச.பரமேஸ்வரநாதன் தலைமையில் இன்று 19-06-2017 காலை 9.30 மணிக்கு இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் பாரம்பரிய நடனங்களுடன் வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமான இந் நிகழ்வில் இந்தியத்துணைத்தூதர் ஆ.நடராஜன் , தமிழ் நாட்டின் தொழிலதிபர் டாக்டர். வி.ஜி. சந்தோசம் , வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் வ.சிறிஸ்கந்தராஜா, வவுனியா தேசியக் கல்வியற் கல்லூரி பீடாதிபதி கு.சிதம்பரநாதன் , சமுக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் நடனம் பாடசாலை மாணவர்களின் திருக்குறல்-பாவோதல், பேச்சு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இவ் திருவள்ளுவர் சிலை தமிழ் நாட்டின் தொழிலதிபர் டாக்டர். வி.ஜி. சந்தோசம் அவர்களின் நிதி பங்களிப்பில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like