வவுனியாவில் சுகாதார அமைச்சின் ஆதரவாளர்களின் பிரதேசவாதக் கருத்துக்கு கண்டனம்

தமிழ் பேசும் மக்கள் என்ற ஒருகுடையில் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையை நிலைநாட்டவேண்டிய சூழ்நிலையில் பிரதேசவாதக் கருத்துக்களை தெரிவிப்பது கண்டனத்திற்குரியதென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (19.06) வவுனியாவில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டமொன்றில் இவ்வாறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இது கண்டனத்திற்குரியது. தமிழ் மக்கள் கட்சி அரசியலுக்குள் அகப்பட்டு; பிரிந்து நிற்பதே ஆபத்தானது . இந்த நிலையில் குறுகிய வட்டத்திற்குள் இவ்வாறான கருத்துகளை வெளியடுவது வருத்தமளிக்கின்றது. இந்தக்கருத்து தொடர்பில் நேரடியாக எனக்கு சம்மந்தம் இல்லாவிட்டாலும் எனக்கு ஆதராவாக நடைபெற்றதாக சொல்லப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் எனது கண்டனத்தை வெளியிடுவது தார்மீக கடமையாகும் என அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு ஆதரவாகவும்இ தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஒற்றுமையையும் வலியுறுத்தி நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையின் போது சிலர் பிரதேசவாதக் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் பலரும் தங்கள் அதிதிருப்தியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like