சற்று முன் வவுனியாவில் பிறந்த குழந்தை கொலை : சந்தேகத்தில் தயார் கைது

வவுனியா ஈஸ்வரிபுரம் பகுதியில் இன்று 20.06.2017 மாலை 5.30 மணியளவில் தனது வீட்டில் தயார் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது பிறந்த குழந்தை இறந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஈஸ்வரிபுரம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. அந்த முறைப்பாட்டில் குழந்தையை பிரசவித்த தயார் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பிரசவித்த குழந்தையை தயாரே கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வைத்தியசாலையில் தங்கியுள்ள தயாரை பொலிசார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மலசல கூடத்தில் குழந்தையின் சடலம் நடந்தது என்ன? பொலிஸார் தீவிர விசாரணையில் ( இரண்டாம் இணைப்பு )

You might also like