வவுனியாவில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வு!!

வவுனியா சாளம்பைக்குளத்தில் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்துமுகமாக இப்தார் நிகழ்வு நேற்று 20-06 மாலை 5.30 மணிக்கு வவுனியா அல் அக்சா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர் றசூல் நஜீம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது சமூர்த்தி சமுதாய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் அதிதிகளாக வைத்தொழில் வணிபத்துறை அமைச்சரின் இணைப்பாளர் முத்து முகமது, பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பாடசாலையின் அதிபர், மார்க்க அறிஞர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என 500 க்கு மேற்பட்டோர் கலந்தகொண்டிருந்தனர்.

You might also like