​வவுனியா பிரதேச செயலகத்தில் சிறப்பு இப்தார் நிகழ்வு

வவுனியா பிரதேச செயலகத்தில் க.உதயராசா (பிரதேச செயலாளர்) தலமையில் இன்று (21.06.2017) 5.30மணி தொடக்கம் 6.40மணிவரை சிறப்பு  இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.மயூரன், ம.தியாகராஜா, பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் அ.பிரதீபன் , தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் ,  சமயத்தலைவர்கள், வவுனியா மாவட்ட கிராம சேவையாளர்கள், வர்த்தகர்கள், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like