வவுனியா செட்டிக்குளத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

வவுனியா செட்டிக்குளம் – அரவிதோட்டம் பிரதேசத்தில் இன்று காலை காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செட்டிக்குளம் மெனிக்பாம் பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் பழங்களை விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வந்தவர் எனவும், காட்டில் பழம் பறிக்க சென்றிருந்த போது யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

You might also like