முள்ளிவாய்க்கால் – வட்டுவாகலில் இருந்து கடற்படையினர் உடனடியாக வெளியேற வேண்டும்

படையினர் அபகரித்து வைத்துள்ள மக்களின் காணிகளை கையளித்துவிட்டு அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும் என முள்ளிவாய்க்கால் – வட்டுவாகல் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு- கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற காணி எடுத்தற் சட்டத்தின் (அத்தியாயம் 460) 4ஆம் பிரிவின் கீழ் காணி சுவீகரிப்பது தொடர்பான ஆட்சேபனை இருப்பின் பதில் அனுப்பும்படி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையைில் இந்த கடிதத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,

முள்ளிவாய்க்கால் – வட்டுவாகலில் பொதுமக்களின் 417 ஏக்கர் காணிகளை இலங்கை கடற்படையினர் 2009ஆம் ஆண்டு தொடக்கம் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

இதனால் எமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகள் தொடர்பில் சகல தரப்பினரிடமும் பல தடவைகள் சந்தித்து ஆட்சேபனை தெரிவித்துள்ளோம்.

இது தொடர்பாக மூன்று முறை எழுத்து மூலமாக எங்களிடம் கோரப்பட்ட போதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.

இந்த நிலையில் எமக்கு வாழ்வாதாரம் தரும் எமது சொந்த நிலங்களை எங்களிடம் கையளித்து விட்டு கடற்படையினர் அவர்களுக்கு பொருத்தமான இடங்களுக்கு செல்லவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

You might also like