சற்று முன் வவுனியா குருமன்காட்டில் பூட்டிய வீட்டில் சடலம் மீட்பு : பொலிஸாரின் விசாரணை ஆரம்பம்

வவுனியா குருமன்காடு முதலாம் ஒழுங்கையில் இன்று (24.06.2017) மதியம் 1.30மணியளவில் பூட்டியிருந்த வீட்டினுள் இருந்து சடலமோன்று மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

வவுனியா குருமன்காடு முதலாம் ஒழுங்கை பகுதியில் நல்லையா சிவராசா (வயது – 73) என்பவரும் அவரின் மனைவியும் வசிந்து வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை ( 21.06.2017) ம் திகதி இவரின் மனைவி அவரது சொந்த ஊரான வட்டக்கச்சிக்கு சென்றுள்ளார். இவர் தனிமையில் வீட்டில் இருந்த சமயத்தில் மதுபாவனை உபயோகித்துள்ளார். அதிகளவு மது போதை பாவித்தமையினால் இவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது வீட்டின் மேல் பகுதியில் குடியிருப்பவர் குறித்த நபரின் நடமாட்டங்கள் எவையும் காணப்படவில்லை என வீட்டின் யன்னல் வழியாக எட்டிப்பார்த்த சமயத்தில் இவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே கிராம சேவையாளருக்கு தகவலை வழங்கி கிராம சேவையாளர் உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் குற்றவியல் அதிகாரிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் கடந்த 1970ம் ஆண்டு காலப்பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தராக பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like