சற்று முன் வவுனியா குருமன்காட்டில் பதட்டம் (படங்கள் இணைப்பு)

வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திலிருந்து இன்று 12.01.2017 மாலை 7மணியளவில் வவுனியா பூவரசன்குளம் ஊடாக செட்டிகுளம் மெனிக்பாம் செல்லும் இ.போ.ச. இறுதி பேரூந்தில் பெருமளவானவர்கள் பயணம் மேற்கொண்டதால் பேரூந்தில் பயணிகள் பயணம் செல்வதில் இடையூறு ஏற்பட்டதுடன் செல்ல வேண்டிய பலர் பேரூந்தில் இடவசதிகள் இன்றி பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருந்ததுடன் குறித்த பேரூந்து பயணத்தினை மேற்கொண்டதும் குருமன்காடு பகுதியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் பெருமளவானவர்கள் பேரூந்தில் ஏற முற்பட்டபோதும் பணம் மேற்கொள்ளாமல் இளைஞர்கள் சிலர் பேருந்தின் மீது ஏறியும் பயணம் மேற்கொள்ள முற்பட்டுள்ளனர்.

இதையடுத்து வவுனியா இ.போ. ச.சாலைக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து மேலும் இரு பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தி குருமன்காடு பகுதியிருந்து இரவு 7.45மணியளவில் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று விடுமுறை நாள் என்பதால் தனியார் பேரூந்துகள் சில கடமைக்குச் செல்ல வில்லை இதன் காரணமாகவே பயணிகள் பலர் இ.போ. ச பேரூந்துக்கு காத்திருந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like