வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இரானுவ வீரர் கைது

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (25.06.2017) காலை 8.00மணியளவில் கேரளா கஞ்சாவுடன் இரானுவ வீரரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மல்லாவி நட்டகண்டான் இரானுவ முகாமில் பணியாற்றி வரும் டினேஸ் குமார ( வயது – 32 ) என்பவர் இன்று (25.06.2017) விடுமுறையினையடுத்து அவரது சொந்த ஊரான காலி மாவட்டத்திற்கு இ.போ.ச பேரூந்தில் சென்றுள்ளார். இதன் போது வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து 68கிராம் 62மில்லிகிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவை வைத்திருந்த குறித்த இரானுவ வீரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16.06.2017 அன்றும் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கிளிநொச்சி அக்கராயன் இரானுவ முகாமில் பணியாற்றும் இரானுவ வீரர் தரங்ககுமார சேனவிரத்ன  (வயது – 33) என்பவரும்  16பையில் போதி செய்யப்பட்ட 25கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது

கடந்த 22.05.2017 அன்றும் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் யாழ்ப்பாணம் ஊரணி இராணுவ முகாமில் பணியாற்றும் இரானுவ வீரர் (பெயர் – சமர)  50கிராம் 200மில்லிகிராம் கேராளா கஞ்சாவுடன் கைது

கடந்த 31.03.2017 அன்றும் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் 100கிராம் 700மில்லி கேரளா கஞ்சாவுடன் கைது குறித்த இராணுவ வீரர் ஏற்கனவே கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்து பணி இடை நிறுத்தப்பட்டவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

You might also like