கிளிநொச்சியில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் கருத்தரங்கு

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் கருத்தரங்கு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கருத்தரங்கு கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

அத்துடன், புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தெளிவூட்டும் கருத்தரங்கு கிளிநொச்சி மாவட்ட கிராம மட்ட அமைப்புகளிற்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்களிற்கு தெளிவூட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த கருத்தரங்கில் அரசியலமைப்பு சபையின் செயலாளர் வின்சன் பக்திராஜா, வ.மா எதிர்கட்சி தலைவரும் சட்டத்தரணியுமான தவராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like