வவுனியாவில் 17 வயது சிறுவனுடன் சென்ற 15 வயது சிறுமி! இருவரும் கைது

வவுனியா செட்டிகுளம் பகுதியில் 17 வயது சிறுவனுடன் தங்கியிருந்த 15 வயது சிறுமியையும் குறித்த சிறுவனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா காரியாலயத்தின் தமிழ் மொழி சேவைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து இந்த நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா செட்டிகுளம் பகுதியில் அனுராதபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவரை 17 வயதுடைய மதவாச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடன் வைத்திருந்துள்ளார்.

இதை அடுத்து வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அலுவலகத்தின் தமிழ் மொழி பொலிஸ் சேவைப்பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் செட்டிகுளம் பொலிஸாருடன் இணைந்து நேற்று மாலை குறித்த இருவரையும் செய்துள்ளனர்.

குறித்த இருவர் தொடர்பிலும் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இததையடுத்து எப்பாவல பொலிஸ் நிலையத்தில் இரண்டு தினங்களாக தமது மகளைக் காணவில்லை என்ற முறைப்பாட்டை குறித்த சிறுமியின் உறவினர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்தே செட்டிகுளம் பகுதியில் கைது செய்யப்பட்ட இருவரையும் எப்பாவல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அலுவலகம் தெரிவித்துள்ளது.

You might also like