வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தை திடீரென முற்றுகையிட்ட மக்கள்

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்கள் இன்று யானைகளில் இருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி ஆர்ப்பட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

செட்டிகுளம் கமநல அபிவிருத்தி திணைக்களததிற்கு முன்பாக ஒன்று கூடிய செட்டிகுளம் பிரதேச விவசாயிகள் மற்றும் யானைகளின் தாக்கத்திற்கு உள்ளாகும் கிராம மக்கள் அங்கிருந்து பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக சென்றிருந்தனர்.

பிரதேச செயலக வாயிலில் யானைகளின் மேச்சல் நிலமாக செட்டிக்குளம் மாறினால் பொருளாதாரத்தில் எப்படி முன்னேற்றம் அடைய முடியும், வில்பத்து சரணாலயமா செட்டிகுளம் சரணாலயமா அரசே பதில் சொல், திட்மிட்டு எமது வாழ்வாதரத்தை கேள்விக்குறியாக்கி எமது மக்களை பட்டினி போடாதே, இறக்காதே இறக்காதே எமது பிரதேசத்தில் யானைகளை இறக்காதே போன்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டததில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவர்களிடம் வருகைதந்த செட்டிக்குளம் பிரதேச செயலக கிராம சேவை தலைமை பீட உத்தியோகத்தர் சு. ஞானேஸ்வரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் வழங்கப்பட்ட மகஜரைப்பெறறுக்கொணடதுடன் பிரதேச செயலகத்தினால் யானை வேலி அமைப்பதற்கான பதீnhன்று வன ஜீவராசிகள் திணைக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை அவர்கள் நடவடிக்கை எடுக்காமையினால் பிரதேச சயெலக மட்டத்தில் இம் மகஜரையும் வைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தை அடுதது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த கலைந்து சென்றிருந்தனர்.

You might also like