வவுனியா பூவரசங்குளத்தில் யானை மரணம் நடந்தது என்ன!!

சாளம்பக்குளம், இலுப்பைக்குளத்தில் இன்று காலை 11.00மணிக்கு யானை ஒன்று இறந்துள்ளது.

இதுபற்றி தெரியவருவதாவது,

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ பிரிவிற்குட்பட்ட சாளம்பக்குளம், இலுப்பைக்குளத்தில் பெண் யானை ஒன்று சுகவீனம் காரணமாக திடீரென கீழே விழுந்துள்ளது. இதனை கண்ணுற்ற கிரமவாசிகள் பூவரசங்குளம் பொலிஸிற்கு தகவல் வழங்கியுள்ளனர். பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பூவரங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஆர்.ராஜகுரு , குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி காமிணி மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சகிதம் அவ்விடம் சென்று யானையை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இருந்தபோதும் காலை 11.00 மணிக்கு அவ் யானை இறந்துள்ளது.

இதன் பின்னர் வன ஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் பி.கிரிதரனால் மதியம் 01.00 மணிக்கு பிரோத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் படி 12 வயதுடைய பெண் யானையின் தொண்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக உணவு உண்ண முடியாமலேயே இறந்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை சம்பவ இடத்திற்கு வவுனியா மாவட்ட உதவி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி மல்வெலகே பார்வையிட்டிருந்தார்.

You might also like