கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதி நியமனம்

கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அஜீத் காரியகரவன்ன, நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன, தெரிவித்தார்.

கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக இதுவரை செயற்பட்டு வந்த மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, பட்டலந்த பயிற்சி முகாமின் புதிய கட்டளைத் தளபதியாக மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் எஸ்.ரணசிங்க, 2015.10.18 ஆம் திகதியுடன் அங்கிருந்த மாற்றப்பட்டு மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அஜீத் காரியகரவன்ன, நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர் இதற்கு முன்னர் பட்டலந்த பயிற்சி முகாமின் கட்டளைத் தளபதியாக பதவிவகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அஜீத் காரியகரவன்ன, பதவியேற்கவுள்ளார்.

You might also like