வவுனியாவில் பாடசாலை மாணவி ஒருவர் ஆசிரியரினால் பாலியல் துஸ்பிரயோகம்..!!

வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் விவசாயம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்  மாணவி ஒருவரை கடந்த 22-06-2017 அன்று பாடசாலையின் புத்தக அறை ஒன்றில் பலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் குறித்த விசாரணைகளை வவுனியா வலயக்கல்வி பணிமனை முன்னெடுத்துள்ளதாகவும் பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமாக குறித்த மாணவி சம்பந்தப்பட்டவர்கள் ஆசிரியர் தரப்பினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.

குறிப்பிட்ட ஆசிரியரின் பாலியல் துஸ்பிரயோகம் சம்பவத்தை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆசிரியரின் மைத்துனர் அரசியல்வாதியாக இருப்பதால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு இன்று (29-06) முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like