தமிழர்கள் தண்டப்பணம் செலுத்த முடியாது! வவுனியா சிங்கள பிரதேச செயலகம் அறிவிப்பு

வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரால் வழங்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்துவதற்காக இன்று 29-06 வவுனியா சிங்கள பிரதேச செயலகத்திற்கு சென்ற வேளையிலே அங்கிருந்த உத்தியோகத்தரால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

வவுனியா அஞ்சல் அலுவலக பணியாளர்களும் 27-06 முதல் தமது அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் பல்வேறு தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

அந்தவகையில் மாணவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் தண்டப்பணம் சேலுத்தவேண்டிய சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன் மாற்றீடாக பிரதேச செயலகங்களில் தங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகவே இன்று வவுனியா சிங்கள பிரதேச செயலகத்திற்கு வாகன தண்டப்பணத்தை செலுத்த சென்ற நபருக்கு சிங்கள பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் தண்டப்பணம் செலுத்த முடியும் என்பதுடன் மற்றவர்கள் வவுனியா தமிழ் பிரதேச செயலகத்திலேயே பணத்தை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து சிங்கள பிரதேசசெயலாளரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டுவரப்பட்டதையடுத்து சம்பந்தப்பட்டவரிடம் தண்டப்பணம் அறவிட்டதுடன் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

You might also like