கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் குறைவடையும் அபாயம்

மாவட்டத்தில் நிலவும் வரட்சியால் நீரப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள ஒன்பது குளங்களிலும் நீர்மட்டம் மிக வேகமாக குறைவடைந்து வருவதனால் விவசாயிகள் மட்டுமல்லாது, பலரும் துன்பங்களை எதிர்கொள்வதாக பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக குளங்களின் நீர் மட்டடம் மிக வேகமாக குறைவடைந்து வருவதுடன் விவசாயச்செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன்,

தற்போதைய வரட்சி காரணமாக இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 6அடி 2 அங்குலமாகவும் கல்மடு 7 அடி 2 அங்குலமாகவும், அக்கராயன்குளம் 13 அடி 3 அங்குலமாகவும் கனகாம்பிகைக்குளம் 6அடி 3 அங்குலமாகவும்,

கரியாலை நாகபடுவான்குளம் 1 அடி, 5 அங்குலமாகவும் பிரமந்தனாறு குளம் 5அடி 3 அங்குலமாகவும் புதுமுறிப்புக்குளம் 13 அடி 4 அங்குலமாகவும், வன்னேரிக்குளம் 5அடி 1 அங்குலமாகவும் குடமுருட்டிக்குளம் ஒரு அடியாகவும் காணப்படுகின்றது.

இந்நிலையில் நீரை மிக சிக்கனமாகப்பயன்படுத்தி பயிர் செய்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற அன்பான கோரிக்கையை விவசாயிகளுக்கு விடுக்கின்றேன்.

இரணைமடுவின் கீழ் 890 ஏக்கரிலும் அக்கரயான்குளம் புதுமுறிப்புக்குளம் வன்னேரிக்குளம் ஆகியவற்றின் கீழ் ஐம்பது வீதமான சிறுபோக செய்கைகள் மேற்கொள்ளல் இந்த வரட்சியென்பது எமது மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளில் மாத்திரமல்லாது, ஏனைய மீன்பிடி மற்றும் சகல செயற்பாடுகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like