குமுழமுனை கற்பகபிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு குமுழமுனை கற்பகப்பிள்ளையார் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று (29.06) காலை  இடம்பெற்றது .

அதிகாலை முதல் கிரியைகள் இடம்பெற்று  காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று அதனை தொடர்ந்து விநாயகர்   உள்வீதி வலம் வந்து 9.00 தேரில் எழுந்தருளி 9.30 மணியளவில் இரத பவனி இடம்பெற்றது .

காலை  பதினொன்று முப்பதளவில்  தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததை தொடர்ந்து அர்ச்சனை இடம்பெற்றது .

ஒன்பதாம் திருவிழா உபயகாரர்களால் அன்னதானமும் வழங்கப்பட்டது.நாளை தீர்த்தோற்சவம் இடம்பெற்று நாளை மறுதினம் பூங்ககாவனத்திருவிழாவுடன் நிறைவுறவுள்ளது. இரவு நிகழ்வாக

பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் யாழ்ப்பாண கலைஞர்களின் ஆடலும் பாடலும் நிகழ்வும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like